/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பை அகற்ற 'நோட்டீஸ்' தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி
/
ஆக்கிரமிப்பை அகற்ற 'நோட்டீஸ்' தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி
ஆக்கிரமிப்பை அகற்ற 'நோட்டீஸ்' தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி
ஆக்கிரமிப்பை அகற்ற 'நோட்டீஸ்' தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி
ADDED : நவ 30, 2024 04:29 AM
திருப்பூர், அனுப்பர்பாளையம் புதுார் முதல் தண்ணீர்பந்தல்காலனி வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் கிழபுறம் அமைந்துள்ளது. அப்பகுதியில், ரோடு உயர்த்தப்பட்டதால், இருபக்கமும் தாழ்வான பகுதியாக மாறியுள்ளது.
மழைநீர் வடிய வசதியில்லாததால், சிறிய மழை பெய்தாலும், மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. கடந்த மாதம் மழை பெய்த போது, காரில் வந்த குடும்பத்தினர், மழைநீரில் சிக்கி தத்தளித்தனர்; பொதுமக்களும், தீயணைப்புத்துறையினரும் மீட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால், துறை சார்பில் ரோட்டின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்.பி., சுப்பராயன் மற்றும் கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர், மத்திய போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அனுப்பினர்.
அதனை பரிசீலித்த மத்திய அமைச்சர், விரைவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என, பதில் அனுப்பியிருந்தார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்ற வேண்டுமென, நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
கவுன்சிலர் செல்வராஜ் (இ.கம்யூ.,) கூறுகையில், ''ஓராண்டு கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சர், மழைநீர் வடிகால் அமைத்து கொடுக்கப்படுமென, கடிதம் வாயிலாக உறுதி அளித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அறிவித்தபடி, அக்., மாத இறுதிக்குள் பணிகள் இறுதி செய்யப்பட்டு, 24 மாதங்களில் மழைநீர்வடிகால் பணி முடிக்கப்படும் என்று நம்புகிறோம்,'' என்றார்.

