/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை அதிகரிக்கணும்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை அதிகரிக்கணும்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை அதிகரிக்கணும்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை அதிகரிக்கணும்
ADDED : செப் 26, 2024 11:27 PM
உடுமலை : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கிராம ஊராட்சிகளில், அரசு கட்டடங்கள் கட்டுவதற்கும், தார் ரோடு போடுவது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள், வரப்பு வெட்டுதல், மரக்கன்று நடுதல் உட்பட வேளாண் பணிகளும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் குறிப்பிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு நாளுக்கு, நுாறு சதவீத பணியை முடிக்கும் பணியாளர்களுக்கு, 319 ரூபாய் வீதம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடுமலை வட்டாரத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக, 40 முதல் நுாறு வரை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வழங்கப்படுகின்றன.
தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும், இப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மாவட்ட ஒன்றிய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: உடுமலையிலுள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும், அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, நுாறு நாள் பணியாளர்கள் பணிக்கு வருகின்றனர். இதில், சில ஊராட்சிகளில் 40 என்ற கணக்கிலும், சில ஊராட்சிகளில், நுாறு வரையிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்களின் எண்ணிக்கையை, 150 வரை அதிகரிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.