ADDED : ஆக 22, 2025 11:58 PM

வேலைவாய்ப்பு பெருகும்
விண்வெளித்துறையில் இந்தியாவின் தலைமைத்துவம், உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 'இஸ்ரோ' வழிகாட்டுதலில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமைகள் காண வழிவகுக்கும் வகையிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சிறப்பாக பங்கெடுத்து, வெற்றியாளர்களாக வலம் வருபவர்கள், 'இஸ்ரோ'வில் பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்று, பின்னாளில் வேலைவாய்ப்பும் பெறுகின்றனர்.விண்வெளி ஆராய்ச்சியில் நம் விஞ்ஞானிகளின் சாதனையால், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மீது ஆர்வம் ஏற்படும். கல்வித்துறையில் புதுமையான விஷயங்கள் இடம் பெறும். விண்வெளி சார்ந்த தொழில்களின் 'ஸ்டார்ட் அப்' எண்ணிக்கை உயரும்; இது, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும். விண்வெளி ஆராய்ச்சியால், மீன் வளம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்படும்.
- பேராசிரியர் மோகனா, செயற்குழு உறுப்பினர்அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு