
நான் எல்.கே.ஜி., முதல், ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்தேன்; கலிலியோ அறிவியல் மன்றம் சார்பில், அறிவியல் சார்ந்த ஓவியப்போட்டியில் பங்கேற்று, தொடர்ந்து பரிசுகளை பெற்று வந்தேன்.
அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட அறிவியல் சார் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளின் பேச்சு, என்னை ஈர்த்தது; அறிவியல் மீது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அறிவியல் சார்ந்த ஓவியங்களை தொடர்ச்சியாக வரைந்து, பரிசும், பாராட்டும் பெற்றேன். பிற ஓவியங்களையும் நேர்த்தியாக வரைந்து பழகினேன். அதுவே ஓவியக்கலை மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, ஓவியக்கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக, கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லுாரியில், 'சீட்' கிடைத்தது; தற்போது, 2ம் ஆண்டு பயின்று வருகிறேன். படிப்பு முடித்த பின் அறிவியல் சார்ந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.
- மெர்சி, கல்லுாரி மாணவி, உடுமலை