/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுநலப்பணி திட்ட முகாம் பள்ளிகளில் இன்று துவக்கம்
/
நாட்டுநலப்பணி திட்ட முகாம் பள்ளிகளில் இன்று துவக்கம்
நாட்டுநலப்பணி திட்ட முகாம் பள்ளிகளில் இன்று துவக்கம்
நாட்டுநலப்பணி திட்ட முகாம் பள்ளிகளில் இன்று துவக்கம்
ADDED : செப் 27, 2024 11:10 PM
உடுமலை: உடுமலை பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உட்பட ஒன்பது பள்ளிகளின் சார்பில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் நடக்கிறது.
முகாமில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிளாஸ்டிக் தவிர்ப்பு, போதைப்பொருளுக்கு எதிரான விழப்புணர்வு ஊர்வலம், உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள சேஷநாராயணன், சரவணன் சார்பில் மூன்று நாட்கள் ஒருங்கிணைந்த முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.