ADDED : அக் 18, 2024 10:29 PM
உடுமலை : உடுமலை ஜல்லிபட்டி, சின்னவீரம்பட்டி, கொங்கல்நகரம் கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு பந்தல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.
பந்தல் சாகுபடியில், கொடிக்கு, மருந்து தெளிப்பது சிரமமானதாகும். எனவே, மகசூல் சரிவை தடுக்க, விவசாயிகள் புதிய முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, விளக்கு பொறி அமைத்து, பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றனர். ஏக்கருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில், இத்கைய பொறி வைத்து, அதில், பூச்சிகளை கவர்ந்து இழுக்கும், எண்ணெய் அல்லது மருந்துகளை ஊற்றுகின்றனர்.
இதில், கவரப்படும் பூச்சிகள், பொறியில் விழுந்து விடுகிறது. அவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் அகற்றி விடுகின்றனர்.
இம்முறையால், பூச்சி மருந்து தெளிப்பது தவிர்க்கப்படுவதுடன், இயற்கையான முறையில், காய்கறியும் உற்பத்தியாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

