ADDED : அக் 03, 2024 05:27 AM
உடுமலை : உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி மகா உற்சவ விழா இன்று துவங்கி, 13ம் தேதி வரைநடக்கிறது.
உடுமலை ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று, காலை,7:30 மணிக்கு, கலச ஸ்தாபனம் நிகழ்ச்சியுடன், நவராத்திரி மகா உற்சவம் துவங்குகிறது.வரும், 12ம் தேதி வரை, தினமும் அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.
11ம் தேதி, சரஸ்வதி, பூஜை, ஆயுத பூஜையும், காலை, 9:00 மணிக்கு, வித்யாரன்யம் நிகழ்ச்சியில், மழலையருக்கு அகரம் எழுதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும், 12ம் தேதி, நவராத்திரி பூஜை மற்றும் கலை விழாவும், அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 13ம் தேதி, அம்மனுக்கு, 102 பால் குட ஊர்வலம் மற்றும் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.
நவராத்திரி மகா உற்சவத்தை முன்னிட்டு, அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.