/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடுவச்சேரியில் விருட்சமாகும் மலைவேம்பு மரக்கன்றுகள்
/
நடுவச்சேரியில் விருட்சமாகும் மலைவேம்பு மரக்கன்றுகள்
நடுவச்சேரியில் விருட்சமாகும் மலைவேம்பு மரக்கன்றுகள்
நடுவச்சேரியில் விருட்சமாகும் மலைவேம்பு மரக்கன்றுகள்
ADDED : ஆக 31, 2025 04:46 AM

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், அவிநாசி அடுத்துள்ள நடுவச்சேரியில், 1,180 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர்' 11வது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், 11வது திட்டம் துவங்கியது. கடந்த மார்ச் மாதம் துவங்கிய இத்திட்டத்தில், இதுவரை, 1.43 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், பசுமை ஆர்வலர்கள் இணைந்து, மரக்கன்று நடும் பணியை விரைந்து செய்து வருகின்றனர்.
திருப்பூர் நேத்ரா ஸ்கேன்ஸ் டாக்டர் தேவராஜன் குடும்பத்துக்கு சொந்தமான, அவிநாசி தாலுகா, நடுவச்சேரியில் உள்ள நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், டாக்டர் தேவராஜன் மற்றும் குடும்பத் தினர் பிரபா, நேத்ரா, சாய்குரு ஆகியோர், 'பிரபா' கார்டனில், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். மலைவேம்பு - 380, மகாகனி - 350, தேக்கு - 350 என, 1,080 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு வகை மாமரம் உள்ளிட்ட, 100 நாட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.