ADDED : ஜூலை 15, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; மனிதனின் உதவி இன்றி தன்னிச்சையாக வளரும் வேப்ப மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய், புண்ணாக்கு ஆகியவை எடுக்கப்படுகிறது. வேப்பம் புண்ணாக்கு சிறந்த அடி உரமாக பயன்படுத்தப்படுகிறது.
வேர்ப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற வேப்பம் புண்ணாக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இதனால் இதற்கு எப்போதும் கிராக்கி நிலவுகிறது.
ஆடி மாதம் வேப்பம்பழ சீசன் காலம். தற்பொழுது சீசன் துவங்கி உள்ளது. எண்ணற்ற பறவைகளுக்கு உணவாகவும், வேப்பம்பழம் பயன்படுகிறது. அதன் சதைப்பகுதி இனிப்பாக இருப்பதால் இதை பறவைகள் விரும்பி உண்கின்றன.
பறவைகளால் வேப்பங்கொட்டைகள் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வேப்ப மரங்கள் முளைக்க காரணமாகின்றன.
பெண்கள் தங்களுக்கு கிடைத்த நேரத்தில் வேப்பங்கொட்டைகளை சேகரித்து வருமானம் ஈட்டுகின்றனர்.