/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்துக்குள்ளான காரை அகற்ற அலட்சியம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழிலதிபர்
/
விபத்துக்குள்ளான காரை அகற்ற அலட்சியம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழிலதிபர்
விபத்துக்குள்ளான காரை அகற்ற அலட்சியம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழிலதிபர்
விபத்துக்குள்ளான காரை அகற்ற அலட்சியம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழிலதிபர்
ADDED : ஏப் 02, 2024 05:04 PM

பல்லடம் அருகே, விபத்துக்குள்ளான காரை அகற்றுவதில் போலீசார் அலட்சியம் காட்டி வந்த நிலையில், தொழிலதிபர் ஒருவர், காரை அப்புறப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
மார்ச் 2ம் தேதி, பல்லடம் - பொள்ளாச்சி நோக்கிச் சென்ற இண்டிகா கார் ஒன்று, எஞ்சின் சூடு காரணமாக, வெங்கடாபுரம் பகுதியில் தீ விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், கார் முற்றிலுமாக தீயில் எரிந்து கருகியது. காரில் சென்றவர்கள் கீழே இறங்கியதால் விபத்திலிருந்து தப்பினர். தீயில் கருகிய கார், விபத்துக்குள்ளான இடத்திலேயே கடந்த ஒரு மாதமாக உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியாக வரும் வாகனங்கள், விபத்துக்குள்ளான காரில் மோதும் அபாயம் உள்ளது. இதை அப்புறப்படுத்த போலீசார் முயற்சிக்காத நிலையில், தொழிலதிபர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் காரை அப்புறப்படுத்தினார்.
இது குறித்து சுல்தான்பேட்டை சேர்ந்த பொக்லைன் உரிமையாளர் கனகராஜ் கூறுகையில், 'எனது வீடு சுல்தான் பேட்டையில் இருப்பதால், பணி தொடர்பாக அடிக்கடி பல்லடம் வந்துவிட்டு திரும்புவது வழக்கம். இவ்வாறு வரும்போது வெங்கடாபுரம் பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான கார் கடந்த ஒரு மாதமாக நடுரோட்டியையே இருந்தது. இரவு நேரங்களில் விபத்துக்குள்ளான கார் இருப்பது தெரியாமல் வாகனங்கள் அதன் மீது மோதும் அபாயம் உள்ளது. எனவே காரை அப்புறப்படுத்துமாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினேன். இருப்பினும் காரை அப்புறப்படுத்த யாரும் முன் வரவில்லை. எனவே விபத்து அபாயம் கருதி, நானே, கிரேன் வரைபளைத்து காரை ரோட்டோரத்தில் தள்ளி வைத்தேன். எதிர்வரும் நாட்களில் இது மூன்று விபத்துக்குள்ளாகும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்திய கனகராஜ், இது தொடர்பான தகவலை எழுத்துப்பூர்வமாக டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் வழங்கினார். கனகராஜன் பணியை பாராட்டிய டி.எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

