sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் பிரதான ரோடுகளில் நிரந்தர நெரிசல்

/

 அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் பிரதான ரோடுகளில் நிரந்தர நெரிசல்

 அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் பிரதான ரோடுகளில் நிரந்தர நெரிசல்

 அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் பிரதான ரோடுகளில் நிரந்தர நெரிசல்


ADDED : பிப் 27, 2026 07:34 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரோடுகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், கடைகள், வணிக வளாகங்கள் அதிகளவு உள்ளது. கட்டட அனுமதி விதி அடிப்படையில், பார்க்கிங் மற்றும் பக்க திறவிடம் அமைக்காமல், விதி மீறி வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.

அதோடு, இந்த ரோட்டில் மழை நீர் வடிகால் மற்றும் அதன் மீது நடை பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரிகள், கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இரு புறமும் உள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு வரும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து, தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், ரோடு குறுகலாக மாறி, வாகன போக்குவரத்து பாதிப்பதோடு, அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

பிரதான போக்குவரத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் வாகனங்கள் குறித்து, நகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், பஸ்கள் வெளியே வர முடியாத நிலையில், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

அதே போல், பழநி ரோடு, பைபாஸ் ரோடு பகுதியிலும், விதி மீறி அமைந்துள்ள கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ரோடுகள் பார்க்கிங் மையமாக மாறி வருவதால், நகரின் போக்குவரத்து மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாகிறது.

எனவே, பிரதான ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி, முழுமையாக அகற்ற நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கட்டட விதி அடிப்படையில், கடைகள், வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து போலீசார், ரோடுகளில் நிரந்தரமாக உள்ள வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தல், அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us