/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நெட்வொர்க் கட்டணம் ரத்து; தொழில் நலனுக்கு அவசியம்'
/
'நெட்வொர்க் கட்டணம் ரத்து; தொழில் நலனுக்கு அவசியம்'
'நெட்வொர்க் கட்டணம் ரத்து; தொழில் நலனுக்கு அவசியம்'
'நெட்வொர்க் கட்டணம் ரத்து; தொழில் நலனுக்கு அவசியம்'
ADDED : மே 27, 2025 11:47 PM
திருப்பூர் : தமிழக அரசு, 2022ம் ஆண்டு முதல், மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், ஆண்டுதோறும் கட்டண உயர்வு செய்து வருகிறது. உற்பத்தி செலவு உயர்வை சமாளிக்க முடியாத நிலையில், மின் கட்டண சுமை, தொழில்துறையை மேலும் சிரமத்துக்கு ஆட்படுத்தி வருகிறது.
கடந்த, 2022ல், 52.6 சதவீதம், 2023ல் 2.18 சதவீதம், 2024ல், 4.83 சதவீதம் என, மூன்று ஆண்டுகளில், 59.61 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், மின்சார நிலை கட்டணமும், 457 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதர, 16 வகை பராமரிப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், தொழில்துறைக்கு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தொழில்துறையினர், மேற்கூரை சோலார் மின் சார கட்டமைப்பு நிறுவி, அதன் வாயிலாக மின்சார செலவை சமாளித்து வந்தனர்; ஆனால், 'நெட்வொர்க்' கட்டணம் என்ற பெயரில், யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம் சராசரியாக கட்டணம் விதிக்கப்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''மேற்கூரை சோலாருக்கு கட்டணம் விதிப்பது, தொழில்துறையை முடக்கும் செயல்.
தமிழக முதல்வர், தொழில் நலன் கருதி, இந்தாண்டுக்கான மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். 'நெட்வொர்க்' கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
'ஜாப் ஒர்க்' கட்டணம்
உயர்த்தக்கூடாது
நீண்ட இடைவெளிக்கு பிறகு, தற்போதுதான், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்தியாவை நோக்கி, புதிய வர்த்தக விசாரணை வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள், கட்டண உயர்வு செய்வது, ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய முடியாத நிலையை உருவாக்கும்; சில மாதங்கள் கட்டண உயர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
- முத்துரத்தினம், தலைவர், 'டீமா'.