/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இந்த ஆண்டும் நீட்டிக்கு உத்தரவு
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இந்த ஆண்டும் நீட்டிக்கு உத்தரவு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இந்த ஆண்டும் நீட்டிக்கு உத்தரவு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இந்த ஆண்டும் நீட்டிக்கு உத்தரவு
ADDED : ஆக 06, 2025 07:52 PM
உடுமலை; நடப்பு கல்வியாண்டில், புதிய பாரம் எழுத்தறிவு திட்டத்தில், கற்போரை கண்டறிய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளிலும் அடிப்படை கல்வி இல்லாமல், தங்களின் பெயர்களை கூட எழுத, படிக்கத்தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படைக்கல்வி அளிப்பதற்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, தன்னார்வலர்கள் வாயிலாக, அரசுப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில், அப்பள்ளி தலைமையாசிரியர்கள் கற்போரை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கற்றலை கற்பிக்க வேண்டும்.
கல்வியாண்டின் இறுதியில், கற்போருக்கான தேர்வுகளும் நடத்தப்படுகிறது.கடந்த கல்வியாண்டில், நுாறு சதவீதம் அனைத்து பகுதிகளிலும் கல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு அரசு அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள், கல்லாதவர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கு கற்றல் பயிற்சிகளும், தன்னார்வலர்கள் வாயிலாக வழங்கப்பட்டன.
இதனால் கடந்த கல்வியாண்டுடன் இத்திட்டம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடப்பு கல்வியாண்டிலும், இத்திட்டத்தில் கற்போரை சேர்க்க கல்வித்துறை அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் தன்னார்வலர்கள் வாயிலாக, கற்போரை கண்டறிவதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். மேலும் தன்னார்வலர்கள் உதவியுடன், கற்போருக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் கல்வி அளிப்பதற்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.