ADDED : நவ 17, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக மலையாளிகள் கவுன்சிலின், திருப்பூர் மாவட்ட குழுவினர், திருப்பூர் சமூக சேவை அமைப்புடன்(டிசோ) இணைந்து, வேலம்பாளையத்தில், குழந்தைகள் தினவிழாவை கொண்டாடினர். 'டிசோ' குழந்தைகள் காப்பகத்தில், ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். அக்குழந்தைகளுக்கு, புத்தாடைகள், பின்னலாடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 'கிட்' வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விருந்து பரிமாறப்பட்டது.
மாவட்ட குழு சேர்மன் முருகேசன், தலைவர் மோகனன், பொதுசெயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் கோபகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

