ADDED : நவ 17, 2025 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து முன்னணி சார்பில், ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம், பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோர்ட் உத்தரவை பின்பற்றி, கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது ஜன., மாதம் தமிழகம் முழுவதும் வேல் வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்லடம் நகர பொறுப்பாளர்கள் அங்குராஜ், விஜய், சுந்தர வடிவேலு, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

