
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் விரிவாக்க பணி, ஒன்றரை ஆண்டாக நடக்கிறது. முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில், 50 சதவீத பணி நிறைவுற்று, பார்க்கிங் தளங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
குமரன் சிலை எதிரே புதிய நுழைவு வாயில் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தி வாகனங்கள் எளிதில் சென்று திரும்பும் வகையில் கட்டப்படுகிறது. இதற்கு முன் இருந்த வழி வாகனங்கள் சென்று திரும்பும் வகையில் உள்ளது; தற்போது கட்டப்பட்டு வரும் நுழைவு வாயில் நேரடியாக ஸ்டேஷன் வாயிலுக்கு சென்று சேரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.