/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை
ADDED : அக் 30, 2024 12:12 AM

பல்லடம் : பல்லடத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
பவ்லடம் வட்டாரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், இந்தாண்டு தீபாவளிக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
வணிகர் சங்கத் தலைவர் கண்ணையன், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் பங்கேற்றனர்.