/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை உற்பத்தி எளிதாக்கிய 'நியூ பியூச்சர்ஸ் டெக்' மெஷின்கள்
/
பின்னலாடை உற்பத்தி எளிதாக்கிய 'நியூ பியூச்சர்ஸ் டெக்' மெஷின்கள்
பின்னலாடை உற்பத்தி எளிதாக்கிய 'நியூ பியூச்சர்ஸ் டெக்' மெஷின்கள்
பின்னலாடை உற்பத்தி எளிதாக்கிய 'நியூ பியூச்சர்ஸ் டெக்' மெஷின்கள்
ADDED : மார் 02, 2024 01:17 AM

'நியூ பியூச்சர்ஸ் டெக்' நிறுவனம், முன்னணி நிறுவனங்களின், ஆடை உற்பத்தி இயந்திரங்களை, திருப்பூர் தொழில்துறையினருக்கு வழங்கி, தொடர் சேவை அளித்து வருகிறது.
'கட்டிங்' பிரிவில் துவங்கி, 'டிசைனிங்', சூயிங், போல்டிங், பேக்கிங், அயர்னிங் என, ஒவ் வொரு பிரிவுக்கான இயந்திரங்களை, திருப்பூருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. 'போலோ' 'டி-சர்ட்' உற்பத்திக்கான, 'யு' மற்றும் 'வி' டைப் டிசைனிங் தைக்கும் இயந்திரங்கள், பருத்தி ஆடைகள் மட்டுமல்ல, செயற்கை நுாலிழை ஆடை வடிவமைப்புக்கு ஏற்ப, வடிவமைக்கப்பட்டுள்ளன.
காலர் 'டி-சர்ட்', 'ரிப் நெக்' டி-சர்ட், குழந்தைகள் ஆடை தயாரிப்புக்கான மெஷின்கள், செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை உற்பத்திக்கான புதிய இயந்திரங்கள், தையல் எதுவுமின்றி ஆடைகளை நேர்த்தியாக வடிவமைக்கும் புதிய வகை மெஷின்; காலர் பட்டி தைக்கும் மெஷின்; பாக்கெட் தைக்கும் மெஷின்; காஜா - பட்டன் தைக்கும் மெஷின் என, அனைத்து மெஷின்களையும் வினியோகம் செய்து வருகிறது.
இதுகுறித்து நிர்வாக இயக்குனர் சீதாராமன் கூறுகையில், ''ஒரு மணி நேரத்தில், 240 பீஸ் காலர் பட்டி தைக்கும் இயந்திரங்கள்; விளையாட்டு ஆடை, ஜிம் ஆடைகள் தைக்கும் மெஷின்கள், கேமராவுடன் கூடிய, எலாஸ்டிக் இணைக்கும் மெஷின்கள் வந்துள்ளன. இவற்றில், எட்டு மணி நேரத்தில், 6,000 எலாஸ்டிக்குகளை இணைக்க முடியும்.,'' என்றார்.

