sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்  பக்தர்களின் நுாதன அழைப்பிதழ்

/

கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்  பக்தர்களின் நுாதன அழைப்பிதழ்

கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்  பக்தர்களின் நுாதன அழைப்பிதழ்

கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்  பக்தர்களின் நுாதன அழைப்பிதழ்


ADDED : அக் 26, 2025 03:04 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க ந்த சஷ்டி விழா திருக்கல்யாண உற்சவத்தை, திருமண அழைப்பிதழ் வடிவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பக்தர்கள்அச்சடித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை (27ம் தேதி) காலை சிறப்பு அபிேஷகமும், மாலையில் சூசரம்ஹாரமும் நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காப்பு அணிந்து, சஷ்டி விரதம் கடைபிடித்து வருகின்றனர். வரும், 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பக்தர்கள், நுாதன முறையில் திருக்கல்யாண உற்சவ அழைப்பிதழ் வடிவமைத்துள்ளனர். வழக்கம் போல், தேதி, நாள், நட்சத்திரம், திதி விவரங்களுடன், தேவர்களின் சேனாதிபதி சென்னியாண்டவருக்கும், இந்திரலோக இளவரசி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் என்று வாசகம் அச்சிட்டுள்ளனர்.

மணமகன் வீட்டாராக, சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர்; மணமகள் வீட்டாராக, இந்திரன், இந்திராணி ஆகியோர், இருஇல்ல அழைப்பு என, பக்தர்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், திருகல்யாண உற்சவ அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us