sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூருக்கான புதிய 'மாஸ்டர் பிளான்' உள்ளூர் திட்டக்குழுமம் மும்முரம்  விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு

/

திருப்பூருக்கான புதிய 'மாஸ்டர் பிளான்' உள்ளூர் திட்டக்குழுமம் மும்முரம்  விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு

திருப்பூருக்கான புதிய 'மாஸ்டர் பிளான்' உள்ளூர் திட்டக்குழுமம் மும்முரம்  விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு

திருப்பூருக்கான புதிய 'மாஸ்டர் பிளான்' உள்ளூர் திட்டக்குழுமம் மும்முரம்  விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு


UPDATED : பிப் 16, 2025 05:54 AM

ADDED : பிப் 16, 2025 02:37 AM

Google News

UPDATED : பிப் 16, 2025 05:54 AM ADDED : பிப் 16, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்ட பிரிவுகளின் படி, திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமத்துக்கான, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2041ம் ஆண்டு வரையிலான, தொலைநோக்கு பார்வையுடன், திருப்பூருக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன்பூண்டி, பல்லடம் நகராட்சிகள், சாமளாபுரம், அவிநாசி, ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் 54 கிராம ஊராட்சிகளுடன், 1,031.66 சதுர கி.மீ., பரப்பளவுடன், உள்ளூர் திட்டக்குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நீடித்த நிலையான வளர்ச்சியுடன், ஜவுளி கண்டுபிடிப்புகளுடன் மையமாக திருப்பூர் செழித்து வளர்ந்து, நிலையான பொருளாதார ஆற்றலை வளர்க்கிறது. திருப்பூரில், ஒரு துடிப்பான நகர்ப்புற சூழலை உருவாக்கும் முயற்சியாக, மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் திட்டக்குழும புள்ளிவிவரப்படி, 13 லட்சத்து, 59 ஆயிரத்து, 814 மக்கள் வசிக்கின்றனர். தொழிலாளர் - 6,50,009 பேர் உள்ளனர். மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் விகிதம், 47.80 சதவீதமாக உள்ளது. தற்போதைய வளர்ச்சி விகித அடிப்படையில், மக்கள்தொகை, 2031ல், 23 லட்சத்து, 69 ஆயிரத்து, 829 ஆக மக்கள் தொகை, 2041ல், 30 லட்சத்து, 79 ஆயிரத்து, 312 ஆக உயரும்.

குடியிருப்பு, வணிகம், தொழில்துறை, விவசாய நோக்கங்களுக்காகவும், பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்த வெளிகளுக்காகவும், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது கட்டடம், நிறுவனங்கள், குடிமை வசதிக்காகவும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை, நடைபாதை, 'ரிங்ரோடு', முக்கிய வீதிகள், ரயில்வே, கால்வாய் உள்ளிட்ட விவரமும் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து முறை மற்றும் போக்குவரத்து சுழற்சி முறையும், எதிர்கால மேம்பாடு, விரிவாக்கம், புதிய வீடுகளுக்கு ஒதுக்கப்படும்.

எந்தெந்த பகுதிகள்


திருப்பூர் ஒன்றியத்தில், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், காளிபாளையம், மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகள்.

பல்லடத்தில், கரைப்புதுார், கணபதிபாளையம், இச்சிப்பட்டி, கோடாங்கிபாளையம், பருவாய், கரடிவாவி, சித்தம்பலம், மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி, கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி, அய்யம்பாளையம், பணிக்கம்பட்டி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், வேலம்பாளையம், பூமலுார், வடுகபாளையம், செட்டிபாளையம்.

அவிநாசி ஒன்றியத்தில், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், தெக்கலுார், வேலாயுதம்பாளையம், செம்பியநல்லுார், பழங்கரை ஊராட்சிகள். ஊத்துக்குளி ஒன்றியத்தில், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, அக்கரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம்.

பொங்கலுார் ஒன்றியத்தில், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், வடக்கு அவிநாசிபாளையம், அலகுமலை, தெற்கு அவிநாசிபாளையம், காட்டூர், பொங்கலுார், உகாயகனுார். கள்ளிப்பாளையம், வி.வடமலைபாளையம், எலவந்தி, வாவிபாளையம், மாதப்பூர், கேத்தனுார் ஊராட்சிகள்.

 திருமுருகன்பூண்டி, ஆண்டிபாளையம், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல் பகுதிகளை இணைக்கும் 'ரிங்' ரோட்டை, 60 அடி ரோடாக உயர்த்துவது.சுள்ளிக்காடு, அவிநாசி, கவுண்டம்பாளையம், பொல்லிக்காளிபாளையம் பகுதிகளை இணைக்கும், 150 அடி அகல ரிங்ரோடு அமைப்பது. செங்கப்பள்ளி, தெக்கலுார், சித்தம்பலம், அவிநாசிபாளையம் பகுதிகளை இணைக்கும், 100 அடி ரிங்ரோடு ஆகிய மூன்று ரிங்ரோடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 ரோட்டின் இருபுறமும், மக்கள் நடந்து சென்றுவர ஏதுவாக, நடைபாதை ரோடுகளும் அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

 நகரின் சரக்கு வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில், ரிங்ரோடுகள் மார்க்கமாக, நான்கு இடங்களில், சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். அதன்படி, அக்ரஹார பெரியபாளையம், பொல்லிக்காளிபாளையம், நேதாஜி அப்பேரல் பார்க், வஞ்சிபாளையம் பகுதிகளில் அமைக்கலாம்.

 உள்ளூர் திட்டக்குழுமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்ரஹார பெரியபாளையம், வீரபாண்டி பிரிவு, குளத்துப்புதுாரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், கோவில்வழியில், பஸ் டிப்போ அமைக்கலாம்.

 திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோவை - சேலம் ரயில்வே வழித்தடத்தில், புறநகர் போக்குவரத்து அமைப்பை சாத்தியமாக்கும் வகையில், புதிதாக மண்ணரை, சிறுபூலுவபட்டி ஆகிய இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 திருப்பூர் வடக்கில், 2வது ரிங்ரோடு பகுதி, நொய்யல் ஆற்றோர பகுதிகள்; தெற்கில், 2வது ரிங்ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகள் என, முக்கிய ரோடுகளை தேர்வு செய்து, மோட்டார் வாகன போக்குவரத்து இல்லாத பாதைகளாக மாற்றலாம்.

 கூடுதலாக, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலங்கள், ஐந்து ரோடுகளில், மேம்பாலம்; 13 ரோடுகளில், கீழ்பாலங்களை விரிவுபடுத்துதல், ஆகிய பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 கோடை கொடீசியா போன்ற வர்த்தக பயன்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.

 இடுவாய் கிராமத்தில், 1.025 ஏக்கரில், நகர்ப்புற வனம் அமைக்கப்படும்.

 அவிநாசியில், விளையாட்டு மைதானம் 6.6 ஏக்கரில் அமைக்கப்படும்.

 பல்லடம் நகராட்சி பகுதியில், 7.1 ஏக்கரில், புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us