/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ்கள் நிறுத்த புதிய இடம்
/
சிறப்பு பஸ்கள் நிறுத்த புதிய இடம்
ADDED : அக் 12, 2025 11:28 PM
திருப்பூர்;தீபாவளி சிறப்பு பஸ்களை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பஸ் ஸ்டாண்ட் எதிரே, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்காக சுத்தம் செய்யப்பட்டுள்ள இடத்தை தற்காலிகமாக பஸ்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அந்த இடத்தில், சேலம், திருவண்ணாமலை செல்ல கூடிய பஸ்களை நிறுத்த ஆலோசித்துள்ளனர். ஓரிரண்டு நாட்களில், அங்கு பாதி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல உள்ளனர். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. தீபாவளி ஷாப்பிங் காரணமாக நகரின் பிரதான ரோடு அதிக போக்குவரத்தால் ஸ்தம்பித்து வருகிறது. கனரக வாகனங்களும் ஆங்காங்கே நுழைந்து விடுகின்றன.
அத்தியாவசிய கனரக வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களை தீபாவளி முடியும் வரை போலீசார் உள்ளே அனுமதிக்காமல், புறநகர் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.