/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பேப் -2025' கண்காட்சி வாயிலாக... புதிய திட்டங்கள்: பின்னலாடை துறையினர் நம்பிக்கை
/
'பேப் -2025' கண்காட்சி வாயிலாக... புதிய திட்டங்கள்: பின்னலாடை துறையினர் நம்பிக்கை
'பேப் -2025' கண்காட்சி வாயிலாக... புதிய திட்டங்கள்: பின்னலாடை துறையினர் நம்பிக்கை
'பேப் -2025' கண்காட்சி வாயிலாக... புதிய திட்டங்கள்: பின்னலாடை துறையினர் நம்பிக்கை
ADDED : ஏப் 18, 2025 11:42 PM

திருப்பூர்: புதிய ரக பின்னல் துணி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு மும்பையில் வரும் 21ல் துவங்கவுள்ள 'பேப் -2025' கண்காட்சி உதவும் என்று திருப்பூர் பின்னலாடைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம்(சி.எம்.ஏ.ஐ.,), நாடு முழுவதும் உள்ள, துணி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, மும்பையில், பிரமாண்ட கண்காட்சி நடத்தி வருகிறது. மும்பையில் உள்ள வர்த்தக கண்காட்சி மையத்தில், ஐந்தாவது கண்காட்சியாக 'பேப் -2025' , வரும் 21ல் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
உலக நாடுகளை தொடர்ந்து, உள்நாட்டு ஜவுளி உற்பத்தியிலும், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி மற்றும் மறுசுழற்சியுடன் கூடிய மறு பயன்பாட்டு ஜவுளி உற்பத்தி தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'பேப் -2025' கண்காட்சி, 'சஸ்டய்னபிலிட்டி - சர்குலாரிட்டி'யை மையமாக கொண்டுள்ளது.
நீடித்த நிலையான ஜவுளி உற்பத்தி மற்றும் மறுபயன்பாட்டு தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில், தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. குறிப்பாக, கோவை - திருப்பூர் மாவட்டங்கள், 'கட்டிங் வேஸ்ட்' கழிவுகளில் இருந்து, மீண்டும் நுால், துணி மற்றும் ஆடை ரகங்களை உற்பத்தி செய்து, முன்னணி வர்த்தக நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன.
மும்பை கண்காட்சிகளமிறங்கிய திருப்பூர்
மும்பை கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, புதிதாக அறிமுக மாகும், பசுமை சார் உற்பத்தி துணி ரகங்களை கண்டறிந்து, உற்பத்தியை புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றலாம் என்ற திட்டத்துடன் திருப்பூர் களமிறங்கியுள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் - சைமா, திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் - டீமா, திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் உள் ளிட்ட சங்கங்கள், நேரில் பார்வையிட்டு, புதிய தொழில்நுட்ப பகிர்வை பெற தயாராகிவிட்டன.
சி.எம்.ஏ.ஐ., அலுவலகம் திருப்பூரில் அமைகிறது
'சைமா' துணை தலைவர் பாலசந்தர் கூறியதாவது:
மும்பை கண்காட்சியில் பங்கேற்க வருமாறு, முதன்முறையாக நேரில் வந்து அழைத்துச்சென்றனர். அதன்படி, 'சைமா' நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், குழுவாக சென்று பார்வையிட திட்டமிட்டுள்ளோம்.
வரும் ஆண்டுகளில் நடைபெற உள்ள கண்காட்சியில், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்கு அமைத்து பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறது. அதன்படி, இதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, புதிய ரக பின்னல் துணி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.
திருப்பூரில் அலுவலகம் அமைத்து, நேரடி தொடர்பை ஏற்படுத்தவும், அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்காக, திருப்பூரில் புதிய அலுவலகம் அமைக்கவும், 'சைமா' உரிய உதவிகளை செய்து வருகிறது. இதன் மூலம், திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் புதிய திருப்பம் உருவாகும் என்று நம்பு கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கண்காட்சி கைகொடுக்கும்
மும்பை கண்காட்சி, உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய 'பேப்ரிக்' தொடர்பாக கண்டறிய, 'டீமா' குழுவினரும் கண்காட்சிக்கு சென்றுள்ளனர். தேசிய அளவிலான, புதிய 'அப்டேட்'களை, உடனுக்குடன் திருப்பூரில் அமல்படுத்த, இத்தகைய கண்காட்சிகள் கைகொடுக்கும்; திருப்பூர் தொழில்துறையினர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- முத்துரத்தினம், தலைவர், 'டீமா'.