ADDED : டிச 08, 2024 02:49 AM

''எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள்; நான் என்ற அகந்தை குடிகொள்ளும் போது ஒருவர் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி நினைக்கத் துவங்கி விடுகிறார்; ஒரு மனிதன் எதன் மீதும் பற்றற்று இருத்தலே நிரந்தர ஞானத்தின் திறவுகோல்.
ஒருவர் தன் அகந்தையை துறப்பதற்கு முதலில் மற்றவர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்குவதை நிறுத்த வேண்டும்'' இவையெல்லாம், புத்த மதத்தை தோற்றுவித்து, மக்கள் யாவரும் துன்பத்தை துறந்து, மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டிய புத்தரின் போதனைகள்.
போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்ற நாளை நினைவு கூறும் வகையில், டிச., 8ல் போதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றளவும் ஏராளமானோர் அவரது கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
- இன்று போதி தினம்
புத்தரின் ஞான போதனை
அனைவரும் துன்பத்தில் இருந்து விடுபட்டு விட்டால், எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும் ஞானத்தின் வாயிலாக போதித்தவர் புத்தர்.
அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமையுண்டு. பெண்களை தவறான பார்வையில் பார்க்கக்கூடாது. பொய் சொன்னால், எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்; அறிவை மழுங்கடிக்கும் போதைப்பொருட்களை பயன்படுத்துவது; சூதாட்டம் கூடாது.
போதைக்கு மனதை ஆட்படுத்திக் கொண்டால், துன்பத்திற்கு அதுவே பெரிய காரணமாகிவிடும். அணுக்களால் உருவாக்கப்பட்ட உடலை பேணி பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகளை கூறியவர் புத்தர். எங்கள் அறிவுத் திருக்கோவிலில் இத்தகைய போதனைகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் தெளிவான மனநிலை கொண்ட பலரும் வந்து செல்கின்றனர்.
- கவுதம காளியப்பன்,
தலைமை குரு,
புத்த தர்ம அறிவுத்
திருக்கோவில்.