/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி உரக்கிடங்கில் புதிய வள மீட்பு மையம்
/
நகராட்சி உரக்கிடங்கில் புதிய வள மீட்பு மையம்
ADDED : டிச 29, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்- தாராபுரம் ரோட்டில், நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு, கடந்த, 2019ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.
இங்கு, அழுகிய காய்கறிகள், பழங்கள், மக்கும் குப்பைகள் உள்ளிட்டவை உரமாக மாற்றப்பட்டு, தேவையானவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இச்சூழலில், இந்த உரக்கிடங்கில், 42 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக வள மீட்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.