/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்துக்கு புதிய ரிங் ரோடு; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கம்
/
பல்லடத்துக்கு புதிய ரிங் ரோடு; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கம்
பல்லடத்துக்கு புதிய ரிங் ரோடு; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கம்
பல்லடத்துக்கு புதிய ரிங் ரோடு; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 08, 2025 11:58 PM
பல்லடம்; பல்லடத்தில், புதிய ரிங் ரோடு அமைப்பதற்காக, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
பல்லடத்தில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால், 2018ல் காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை, ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போதைய ஆட்சியில், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அளவீடு, நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பணிகள் கிடப்பில் போடப்பட்டு, திட்டமும் ரத்து செய்யப்பட்டது. ரிங் ரோடு திட்டம் இனி நிறைவேற வாய்ப்பில்லை என கருதப்பட்டது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் அனைத்து ரிங் ரோடும், தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்போது, மீண்டும் ரிங் ரோடு அமைக்க தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை ரிங் ரோடு அமைக்க கருத்துரு கேட்கப்பட்டுள்ளது. இதற்காக, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது, ஏற்கனவே அறிவித்த திட்டத்தைப்போல் இருக்காது. முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பின், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், அளவீடு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் துவங்கும்,' என்றார்.