/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் புதிய தையல் இயந்திரம்
/
ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் புதிய தையல் இயந்திரம்
ADDED : ஆக 30, 2025 12:29 AM

திருப்பூர்; ஜவுளி தொழிலில் தையல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 'ஏஐ' தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தையல் மெஷினை சங்கத் மெஷின் அறிமுகப்படுத்தியுள்ளது.
தையல் மெஷின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 'ஜாக்' நிறுவனம் புதிதாக அதிநவீன 'ஏஐ' தொழில் நுட்பத்துடன் கூடிய தையல் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது.
தையல் பணியின் போது, ஏற்படும் ஆயில் உள்ளிட்ட கறைகள் ஏற்படாத வகையில் இந்த மெஷின் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா நேற்று வேலன் ஓட்டல் மான்செஸ்டர் ஹாலில் நடந்தது.
விழாவில், திருப்பூர் 'சங்கத்' மெஷின்ஸ் நிர்வாக இயக்குனர் சேதுபதி தாமோதரன் தலைமை வகித்தார். இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா சண்முகம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 'சங்கத்' மெஷின் சார்பில் ஜாக் ஏ.எம்.எச். - 2 இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, புதிய மெஷினின் செயல்பாடுகள் மற்றும் உத்தரவாதம் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.