ADDED : ஜூலை 01, 2025 12:14 AM

பெருமாநல்லுார்,; -திருப்பூர் பயனீர்ஸ் ரோட்டரி சங்கம், பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வயோங் டூக்கரா ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில், கணக்கம் பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கு 17.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டது.
இதை மாணவ, மாணவியர் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. எம்.எல்.ஏ.,விஜயகுமார் கழிப்பறையை திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார்.
ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், தலைமை ஆசிரியர் சர்மிளா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நவீன் குமார், கேசவ மூர்த்தி, பி.டி.ஏ தலைவர் சண்முகசுந்தரம், வளர்ச்சி குழு தலைவர் சவுந்தரராஜன், செயலாளர் செந்தில் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் ஷீல்டு வழங்கி பாராட்டினர்.