sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின்னலாடை தொழில் அமைப்பினருடன் புதிய சம்பள ஒப்பந்தம்! தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை எப்போது?

/

பின்னலாடை தொழில் அமைப்பினருடன் புதிய சம்பள ஒப்பந்தம்! தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை எப்போது?

பின்னலாடை தொழில் அமைப்பினருடன் புதிய சம்பள ஒப்பந்தம்! தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை எப்போது?

பின்னலாடை தொழில் அமைப்பினருடன் புதிய சம்பள ஒப்பந்தம்! தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை எப்போது?


ADDED : ஆக 13, 2025 10:43 PM

Google News

ADDED : ஆக 13, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம், செப்., 30ம் தேதியுடன் காலாவதியாகிறது; புதிய சம்பள உயர்வு பேச்சு வார்த்தைக்கு தயாராகும் வகையில், தொழிற்சங்கங்கள் கோரிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி மற்றும் சார்புடைய தொழில் பிரிவுகள் என, நேரடியாகவும், மறைமுகமாகவும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட மக்களும், நாட்டில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த மக்களும், இத்தொழிலில் அங்கம் வகிக்கின்றனர் .

கொரோனா தொற்றால்தாமதமான பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த, 2016ல் உருவான ஒப்பந்தம் காலாவதியான பிறகும், கொரோனா தொற்று காரணமாக, சம்பள பேச்சு துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தொழில் அமைப்புகள்தொழிற்சங்கங்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா), ஆகிய தொழில் அமைப்புகள், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - எல்.பி.எப்., - எம்.எல்.எப்., - ஏ.டி.பி., - பி.எம்.எஸ்., ஆகிய எட்டு தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்னும் 45 நாளில்ஒப்பந்தம் காலாவதி கடந்த, 2021ல் ஏற்படுத்திய சம்பள உயர்வு ஒப்பந்தம், அடுத்த மாதம் (செப்)., 30ம் தேதியுடன் காலாவதியாகிறது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து திருப்பூர் மீண்டு வந்த நிலையில், பேச்சுவார்த்தை துவங்கியது. 90 சதவீத சம்பள உயர்வு, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரும் விலைவாசி புள்ளிக்கு, 30 காசு பஞ்சப்படி உட்பட, 16 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. எட்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது; அதன்படி, 32 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டது; பயணப்படியாக, 25 ரூபாயும், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல், புள்ளிக்கு 14.5 பைசா வீதம் பஞ்சப்படியும் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த சம்பள உயர்வு ஒப்பந்தம் இன்னும், 45 நாட்களில் காலாவதியாகிறது. தொழிலாளர் நலன்கருதி, ஒவ்வொரு தொழிற்சங்கமும், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பான கோரிக்கையை முன்வைக்க துவங்கிவிட்டன.

பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ''வ ழக்கமான நடைமுறைப்படி, சம்பளப் பேச்சுவார்த்தை துவங்கும்'' என்கின்றனர்.

கூடுதல் சம்பளம்வழங்க கடிதம் விலைவாசி அடிப்படையில், ஒரு குடும்பம் வாழ, மாதம், 32 ஆயிரத்து, 941 ரூபாய் தேவை என, 'வளர்மதி' மளிகை பொருட்கள் பட்டியலின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக உருவாகும், சம்பள உயர்வில், இதைக் காட்டிலும் கூடுதல் மாதசம்பளம் வரும் அளவுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

-- சேகர், பொதுச்செயலாளர், ஏ.ஐ.டி.யு.சி.,

கூட்டு கோரிக்கைமுன்வைப்போம் தமிழக அரசு வெளியிட்ட பின்னலாடை தொழிலாளருக்கான குறைந்தபட்ச சம்பள உயர்வு நிர்ணயம் தொடர்பாக ஆட்சேபனை எழுந்துள்ளது. கோர்ட்டில் தடையாணை பெற்றிருக்கிறோம். தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக, விரைவில் கோரிக்கைகள் தயாரிக்கப்படும். தொழிற்சங்கங்கள் கூட்டு கோரிக்கையாக தயாரித்து, உற்பத்தியாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். சம்பள உயர்வு கோரிக்கை விரைவில் தயாரிக்கப்படும். இருப்பினும், மத்திய தொழிற்சங்கங்கள் முடிவுப்படி, மாத சம்பளம் 28 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் வகையில் சம்பள உயர்வு பெறுவோம்.

--- சம்பத், மாவட்ட தலைவர், சி.ஐ.டி.யு.,

வீட்டு வாடகைப்படிஅதிகம் தர வேண்டும் தொழிலாளர்கள், விலைவாசி உயர்வால் அவதிப்படுகின்றனர். வீட்டு வாடகை அதிகமாகிவிட்டது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, சம்பள உயர்வுடன், வீட்டுவாடகை படியும் வழங்க வேண்டும். இன்றை ய தேவையை பூர்த்தி செய் யும் வகையில், சம் பள உயர்வு கோரிக்கை தயாரிக்கப்படும்.

- சிவசாமி, பொதுச்செயலாளர், ஐ.என்.டி.யு.சி.,

பொது கோரிக்கைதயாரிக்கப்படும் வெளியூர்களை சேர்ந்த மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர். வாடகை செலவு, விலைவாசி உயர்வை சமா ளிக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு ஏற்ப, சம்பள உயர்வு கேட்டு பெ றப்படும். அதற்காக, எச்.எம்.எஸ்., பொது கோரிக்கை தயாரிக்கும் பணியை துவக்கியுள்ளது.

- முத்துசாமி, மாவட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.,

விலைவாசிக்கேற்றசம்பளம், பயணப்படி கிளை வாரியாக கூட்டம் நடத்தி, சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கா ன கோரிக்கை தயாரிப்பு மேற்கொள்ளப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு, பயணப்படி வழங்கப்பட வேண்டும். பனியன் துறையில் தான் சம்பளம் குறைவாக இருக்கிறது. மற்ற பிரிவுகளில் தின சரி சம்பளம் அதிகம். அடுத்து வரும் பேச்சுவார்த்தையில் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்படும்.

- ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர், எல்.பி.எப்.,

குறைந்தபட்ச சம்பளம்ரூ.28 ஆயிரம் வேண்டும் தேசிய அளவில், மாதாந்திர சம்பளம், 28 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும்; பயணப்படியும் வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப, ஒரு 'ஷிப்ட்' சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.

--- ----செந்தில், மாவட்ட செயல் தலைவர், பி.எம்.எஸ்.,






      Dinamalar
      Follow us