/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்தாண்டு திருப்பலி கிறிஸ்துவர்கள் வழிபாடு
/
புத்தாண்டு திருப்பலி கிறிஸ்துவர்கள் வழிபாடு
ADDED : ஜன 02, 2026 05:40 AM
திருப்பூர்: ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை வரவேற்கும் விதமாகவும், கடந்தாண்டு முழுக்க இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், அனைத்து சர்ச்களிலும், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டது. நேற்று காலையும், திருப்பலி நடத்தப்பட்டது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சர்ச்களின் உட்புறம் மற்றும் வெளிப்புற வளாகம் முழுக்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில், திருப்பூர் குமரன் ரோடு கேத்ரீனாள் சர்ச், குமார் நகர் புனித ஜோசப் சர்ச், பூமலுார் புனித அந்தோணியார் சர்ச், பல்லடம் புனித வேளாங்கன்னி சர்ச், அவிநாசி புனித தோமையார் சர்ச், சேவூர் லுார்துபுரம் புனித லுார்து அன்னை சர்ச், குமார் நகர் புனித பால் சர்ச், நல்லுார் யூக்கரிஸ்ட் சர்ச், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, டி.இ.எல்.சி., சர்ச் உட்பட அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., மற்றும் பிற சபை சார்ந்த தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.

