sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : மே 02, 2025 12:24 AM

Google News

ADDED : மே 02, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே தின விழா கொண்டாட்டம்; 62 யூனிட் ரத்தம் சேகரிப்பு


திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தையல் நுால் வியாபாரிகள் சங்கம் சார்பில், மே தின ரத்த தான முகாம், அரண்மனைபுதுார் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. காஜாபட்டன் சங்க தலைவர் ருத்ரமூர்த்தி, செயலாளர் சுப்பிரமணி, தையல் நுால் வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் ஜெயக்குமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ குழுவினர், ரத்தம் சேகரித்தனர். கொடையாளர் 62 பேரிடமிருந்து, 62 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

---

அரண்மனைப்புதுார் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தையல் நுால் வியாபாரிகள் சங்கம் இணைந்து ரத்தான முகாமை நடத்தின.

ஹெச்.எம்.எஸ்., மாவட்ட சங்கம்


திருப்பூர் மாவட்ட தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்கம் சார்பில், மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் தலைமைவகித்தார். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், சிறுபூவப்பட்டியில் உள்ள சங்க மாவட்ட அலுவலகம், பெருமாநல்லுார், சேவூர், பல்லடத்தில் தெற்கு அவினாசிபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாவில், சங்க கொடி ஏற்றப்பட்டது. சங்க செயலாளர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

---

ஐ.ஜே.கே., மே தின விழா


திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில், மே தின விழா நேற்று நடைபெற்றது. திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் மாவட்ட தலைவர் பாரி கணபதி, தலைமையில் கட்சியினர் கொடியேற்றி மே தின வாழ்த்து கோஷங்கள் எழுப்பி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பிரேம், கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுமன், துணை செயலாளர்கள் சசிகுமார், அலெக்ஸ் பாண்டியன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் குணா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

---

அண்ணா தொழிற்சங்கம்


அவிநாசி நகர அ.தி.மு.க., சார்பில் கைகாட்டிப்புதுாரில், நகரச் செயலாளர் ஜெயபால் தலைமையில், கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர துணைச் செயலாளர் மூர்த்தி, ஜெ., பேரவை செயலாளறர் ராஜசேகர், ஐ.டி.,பிரிவு கோகுல் கார்த்திக், வக்கீல் சுதர்சன், வார்டு செயலாளர் மல்லீஸ்வரன், வேலுச்சாமி, சிவக்குமார், செந்தில், கோவிந்தராஜ், சதாசிவம், நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவிநாசி தெற்கு ஒன்றிய, ஏ.டி.பி., ஒன்றிய செயலாளர் நடராஜ் தலைமையில், வேலாயுதம்பாளையம் பகுதியில் கொடியேற்றப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், ஜெ., பேரவை செயலாளர் தம்பி ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் செந்தில், கிளை கழக செயலாளர் முத்துசாமி, ராஜ்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.---

பெண்களுக்கு பாராட்டு


சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன் சார்பில், திருமுருகன்பூண்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. துணை தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். பொது செயலாளர் கிறிஸ்டோபர், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மூத்த ஆலோசகர் ராமலிங்கம், தட்சிணாமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றனர். சுய உதவி குழு உறுப்பினர்கள், 15 நபர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பெற்ற சிறந்த மங்கையர் சான்றிதழை, சங்க தலைவர் காதர் பாட்சா வழங்கினார்.

---

ரத்த தான முகாம்


வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு மற்றும் வெள்ளகோவில் அரசு மருத்துவமனை சார்பில், 61 வது ரத்த தானம் முகாம் வெள்ளகோவில் ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமை அரசு டாக்டர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார். மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், துணை செயலாளர் ராம், செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், நுாறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொடையாளர்களிடம் இருந்து, 111 யூனிட் ரத்த தானமாக பெறப்பட்டு, தாராபுரம் அரசு ரத்த வங்கி டாக்டர் சத்திராஜனிடம் வழங்கப்பட்டது. ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

---

தி.மு.க., தொழிற்சங்கம்


திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள, கோவை,திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்.) அலுவலகத்தில், மே தின கொடியேற்று விழா நடந்தது. சங்க தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் பூபதி, துணை செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். சங்க பொது செயலாளர் ராமகிருஷ்ணன் சங்க கொடியேற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இதே போல், பல்வேறு நிறுவன கிளைகள் சார்பிலும், கொடியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us