UPDATED : அக் 13, 2026 02:35 AM
ADDED : அக் 13, 2026 02:32 AM

வசதிகள் ஒப்படைப்பு
அவிநாசி: அவிநாசி வட்டார பள்ளிகளில் என்எம்சிடி – கேகேஎஸ் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட, பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் ஒப்படைப்பு விழா நடந்தது. பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, சேவூர் துவக்கப்பள்ளியில் கழிப்பறை, நரியம்பள்ளி புதுாரில் நாப்கின் எரியூட்டும் கருவி வழங்கப்பட்டது. என்எம்சிடி இயக்குனர் சங்கரநாராயணன், கல்வி அலுவலர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புட்நோட்: அரசுப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை என்எம்சிடி இயக்குனர் சங்கரநாராயணன் திறந்துவைத்தார்.
கண் சிகிச்சை முகாம்
பல்லடம்:- கே.என்.புரத்தில் லயன்ஸ் சங்கம், பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. நுாற்றுக்கும் மேற்பட்டோர் பரிசோதனை, சிகிச்சை பெற்றனர்.
புட்நோட்: படம் மட்டும்
மழைச்சோறு வழிபாடு
பொங்கலுார்:- தங்காய்புதுாரில் நல்ல மழை வேண்டி கிராம மக்கள் வீடு வீடாக மழைச்சோறு எடுத்து பிள்ளையார் கோவிலில் வழிபட்டனர். ஊர்வலமாக சென்று கூழ், கஞ்சி வழங்கி வழிபாடு நடத்தினர்.
புட்நோட்: மழைச்சோறு எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள்.
பழைய மின் கட்டணமே!
திருப்பூர்:- ராயபுரம், ராமையா காலனி பகுதிகளில் நிர்வாக காரணத்தால் மின் கணக்கீடு இல்லாததால், ஆகஸ்ட் மாத கட்டணத்தையே அக்டோபர் மாதமும் செலுத்தலாம் என செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
