/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுத்த மாதம் செய்முறை தேர்வு: மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி
/
அடுத்த மாதம் செய்முறை தேர்வு: மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி
அடுத்த மாதம் செய்முறை தேர்வு: மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி
அடுத்த மாதம் செய்முறை தேர்வு: மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி
ADDED : ஜன 19, 2024 11:32 PM
உடுமலை:இரண்டாவது வாரம் செய்முறைத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வக பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மாணவருக்கு, மார்ச், 1ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி பொதுத்தேர்வு துவங்குகிறது. அதற்கு, 15 நாட்களுக்கு முன்பாக செய்முறைத்தேர்வை முடிக்க தேர்வுத்துறை ஆயத்தமாகி வருகிறது.
ஆகையால், பிப்., 12 முதல், 17ம் தேதி வரை செய்முறைத்தேர்வை நடத்தி முடிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, மாணவ, மாணவியரை செய்முறைத்தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக, ஆய்வக பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு ஆய்வகப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, இரு பருவங்களாக, தேசிய திறனறி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக அந்த தேர்வுக்கு இணையாக வினாக்கள் தயாரித்து, தேர்வு நடத்தப்படுகிறது.
சில பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எதிர்கொள்ள ஆர்வம் குறைவாகவே உள்ளது. இருப்பினும், பிளஸ்2 வகுப்பு வரை, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதால், அவர்களை ஆசிரியர்கள் முனைப்புடன் தயார் படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.