/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுத்தாண்டு போட்டித்தேர்வு: வேலை வாய்ப்புத்துறை ஆயத்தம்
/
அடுத்தாண்டு போட்டித்தேர்வு: வேலை வாய்ப்புத்துறை ஆயத்தம்
அடுத்தாண்டு போட்டித்தேர்வு: வேலை வாய்ப்புத்துறை ஆயத்தம்
அடுத்தாண்டு போட்டித்தேர்வு: வேலை வாய்ப்புத்துறை ஆயத்தம்
ADDED : டிச 10, 2025 09:11 AM
திருப்பூர்: அடுத்தாண்டு நடக்கவுள்ள போட்டி தேர்வுக்கு, தற்போதில் இருந்தே, பயிற்சி வழங்க மாவட்ட வேலை வாய்ப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப்பணிக்கான போட்டி தேர்வில் பங்கெடுத்து, அரசுப்பணி பெறுவதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில், கலெக்டர் அலுவலகம் மற்றும் குண்டடடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், போட்டி தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு, இலவச பயிற்சி மற்றும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை- 2, முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான போட்டி தேர்வு, அடுத்தாண்டு (2026) அக். 25ம் தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வி.ஏ.ஓ. - தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, அடுத்தாண்டு (2026), அக். 20ம் தேதி தேர்வு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில், குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு துவங்க இருக்கிறது.
வாரந்தோறும், வியாழன், ஞாயிறு வரை, இருமுறை மாதிரி தேர்வு நடத்தப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 0421-2999152, 94990 - 55944 என்ற எண்களில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார் .

