/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் பயன்பாட்டில் முறைகேடு: தி.மு.க. ஆபீசுக்கு அபராதம்
/
மின் பயன்பாட்டில் முறைகேடு: தி.மு.க. ஆபீசுக்கு அபராதம்
மின் பயன்பாட்டில் முறைகேடு: தி.மு.க. ஆபீசுக்கு அபராதம்
மின் பயன்பாட்டில் முறைகேடு: தி.மு.க. ஆபீசுக்கு அபராதம்
ADDED : டிச 10, 2025 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம், அனுப்பர்பாளையத்தில் செயல்படுகிறது. பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இந்த அலுவலகம் கடந்த மார்ச் மாதம் முதல் செயல் படுகிறது.
இந்த கட்டடத்தில் தொழிற்சாலைக்கான மின் இணைப்பு உள்ளது. கட்சி அலுவலகம் இங்கு துவங்கிய பின்னரும், அலுவலகப் பயன்பாட்டுக்கு மின் இணைப்பு பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் மின் இணைப்பு வகை மாற்றம் செய்யப்படவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் மின் வாரியத்தினர் ஆய்வு நடத்தி கட்டட உரிமையாளருக்கு 17,261 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.