sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மண் கடத்தலால் குட்டையாக மாறிய பட்டா நிலம்: புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

/

 மண் கடத்தலால் குட்டையாக மாறிய பட்டா நிலம்: புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

 மண் கடத்தலால் குட்டையாக மாறிய பட்டா நிலம்: புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

 மண் கடத்தலால் குட்டையாக மாறிய பட்டா நிலம்: புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்


ADDED : டிச 10, 2025 09:11 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் அருகே, மண் கடத்தல் காரணமாக, பட்டா நிலம் ஒன்று குட்டையாக மாறி உள்ளது. புகார் கிடைத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடத்தை அடுத்த, கேத்தனுார் - எலவந்தி செல்லும் ரோட்டில், மண் கடத்தல் நடந்து வந்துள்ளது. இங்குள்ள ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.

பட்டா நிலத்துக்கு செல்ல, பிரத்யேக வழித்தடம் அமைத்து, இரண்டு இடங்களில், ஏறத்தாழ, 10 அடி ஆழத்துக்கு மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதனால், அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டா நிலம், தற்போது குட்டையாக உருமாறி உள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகவே, இப்பகுதியில் மண் கடத்தல் நடந்து வந்தது. இரவு - பகல் பாராமல், ஏராளமான டிப்பர் லாரிகளில் கனிமவள கடத்தல் நடந்தது. இது தொடர்பாக, கனிமவள துறைக்கு தகவல் தெரிவித்தால், மண் கடத்தும் ஆசாமிகள், புகார் தெரிவித்தவரை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் எஸ்.ஐ.ஆர். பணியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மண் கடத்தல் கும்பல், பல நுாறு டன் கனிம வளத்தை கடத்தி சென்று விட்டது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, பட்டா நிலம், தற்போது குட்டையாக உருவெடுத்துள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து கேத்தனுார் வி.ஏ.ஓ. மகேஸ்வரனிடம் கேட்டதற்கு, ''மண் எடுக்கப்பட்ட நிலம் கூட்டு பட்டாவாக உள்ளது. பட்டா நிலமாக இருந்தாலும் மண் வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.

பொதுமக்கள் என்னிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, மூன்று முறை தாசில்தாரிடம் தெரிவித்துள்ளேன். நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றபோது, அங்கு எந்த வாகனங்களும் இல்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us