/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிப்ட்-டீ பிரீமியர் லீக்: அதிரடி காட்டிய அணிகள்
/
நிப்ட்-டீ பிரீமியர் லீக்: அதிரடி காட்டிய அணிகள்
ADDED : ஆக 17, 2025 11:40 PM

திருப்பூர்; நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, டெக்னோ ஸ்போர்ட்ஸ், சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள், குவாலியன்ஸ், எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் வெற்றியை கைப்பற்றின.
நிப்ட்-டீ கல்லுாரி, 'தினமலர்' நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட் சார்பில், அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான ஏழாவது 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடர், திருப்பூரில் கடந்த 9ல் துவங்கி நடைபெற்றுவருகிறது.
முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த தொடரில், 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன அணிகள் பங்கேற்றுள்ளன. தொழிலாளர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைதோறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது நாள் லீக் போட்டிகள் நேற்று நடைபெற்றன. நான்கு போட்டி களில், எட்டு அணிகள்பங்கேற்று மோதின.
முதல் போட்டியில், ஸ்ரீ சிவஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் - டெக்னோ ஸ்போர்ட் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெக்னோ ஸ்போர்ட், நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில், 7 விக்கெட் இழந்து 120 ரன் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரீ சிவ ஜோதி ஸ்பின்னிங் மில்ஸ், 14.4 ஓவரில், பத்து விக்கெட்டுகளையும் இழந்து, 67 ரன்னில் ஆட்டமிழந்தது.
இரண்டாவது போட்டியில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் (ஈகிள்ஸ்) - சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சுலோச்சனா, பத்து விக்கெட் இழப்பில், 82 ரன் எடுத்தது.
அடுத்து ஆடிய சி.ஆர்., கார்மென்ட்ஸ், 12 ஓவரில், 7 விக்கெட் இழந்து, 87 ரன்னுடன் வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் - தினேஷ் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தினேஷ் டெக்ஸ்டைல்ஸ், 13.4 ஓவரில், பத்து விக்கெட் இழந்து, 55 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய குவாலியன்ஸ், 4.5 ஓவரில், 5 விக்கெட் இழந்து, 57 ரன்னுடன் வெற்றியை வசமாக்கியது.
நான்காவது போட்டியில், எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் (ஸ்மேஷர்) மற்றும் சி.ஆர்., கார்மென்ட்ஸ் (டைகர்) அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ், 3 விக்கெட் இழப்பில் 132 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சி.ஆர்., கார்மென்ட்ஸ் (டைகர்), 15 ஓவரில், 8 விக்கெட் இழந்து, 97 ரன்னில் ஆட்டமிழந்தது.
அடுத்த போட்டி நான்காவது நாள் லீக் போட்டிகள், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளன. இப்போட்டியில், தங்கமன் அணி, காஸ்மோ டெக்ஸ் அணியை எதிர்கொள்கிறது; எஸ்.டி., வாரியர்ஸ் - ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
மூன்றாவது போட்டியில், எஸ்.என்., (சார்ஜர்ஸ்) - யுனி சோர்ஸ் அணிகளும்; நான்காவது போட்டியில், அனுகிரஹா பேஷன் - ராம்ராஜ் காட்டன் அணிகளும் மோதுகின்றன.