/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலண்டரில் கைவண்ணம் 'நிப்ட் -டீ' மாணவியர் 'கலர்புல்' கலக்கல்
/
காலண்டரில் கைவண்ணம் 'நிப்ட் -டீ' மாணவியர் 'கலர்புல்' கலக்கல்
காலண்டரில் கைவண்ணம் 'நிப்ட் -டீ' மாணவியர் 'கலர்புல்' கலக்கல்
காலண்டரில் கைவண்ணம் 'நிப்ட் -டீ' மாணவியர் 'கலர்புல்' கலக்கல்
ADDED : ஜன 05, 2025 02:09 AM
திருப்பூர், முதலிபாளையம், 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவிகள் வடிவமைத்த புதிய டிசைன் ஆடைகள் படங்களுடன் வெளியிடப்பட்ட, 'கலர்புல்' மாதாந்திர காலண்டர், மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. 'நிப்ட்-டீ' கல்லுாரியில், மாணவ, மாணவியர் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் டிசைனிங்' பயிற்சி பெற்று வருகின்றனர். ஆடை வடிவமைப்புடன், பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகின்றனர். கடந்த, 2016ம் ஆண்டு முதல், காலண்டர் தயாரித்து வெளியிடப்படுகிறது.
கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கூட்டாக இணைந்து, அதற்காகவே, 12 டிசைனில், மாறுபட்ட கலர்களில் புதிய ஆடைகளை தயாரிக்கின்றனர். அதை, மாணவியரே அணிந்து 'மாடலிங்' போல் போட்டே எடுத்து, காலண்டர் வடிவமைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், திருப்பூரின் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் பங்களிப்புடன், காலண்டர் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இந்தாண்டு, வெளியிடப்பட்ட, 12 வகையான 'கலர்புல்' போட்டோக்கள் மற்றும் கல்லுாரி தகவல்கள் அடங்கிய காலண்டர், திருப்பூர் தொழில்துறையினர் இடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
'ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில், மாறுபட்ட டிசைன்களில் ஆடைகள் வடிமைக்கப்பட்டுள்ளன.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர் கூட்டாக இணைந்து, மூன்று மாதங்களில், இந்த 'கலர்புல்' காலண்டரை வடிவமைத்ததாக, கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

