/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிப்ட்- டீ' கல்லுாரிக்கு புதிய நிர்வாகக்குழு
/
'நிப்ட்- டீ' கல்லுாரிக்கு புதிய நிர்வாகக்குழு
ADDED : ஆக 24, 2025 06:26 AM

திருப்பூர் : முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரியின் புதிய நிர்வாகக்குழு நேற்று, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றது.
திருப்பூரில் இயங்கி வரும், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரிக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்கிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதம், நிர்வாகக்குழு தேர்தல் அறிவிப்பு வெளியானது.
பொறுப்புகளுக்கு, தலா ஒருவர் மட்டும் போட்டியிட்டதால், நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், (2025 -2028 ) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பொறுப்பேற்றனர். தலைவராக, எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் கோவிந்த ராஜூ, துணை தலைவர்களாக, ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ் பழனிசாமி மற்றும் மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட்ஸ் கந்தசாமி, பொருளாளராக, கோகுல் நிட்பேப்ஸ் மோகன்குமார், பொதுச் செயலாளராக, ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் பொதுசெயலாளர் விஜயகுமார், இணை செயலாளர்களாக தன்வர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ் ஸ்ரீதர் மற்றும் காட்டனி பேஷன்ஸ் கந்தசாமி மற்றும் 12 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகளுக்கு, ஏற்றுமதியாளர்களும், கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.