/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிப்ட்-டீ டிராபி செஸ்; 800 வீரர்கள் பங்கேற்பு
/
நிப்ட்-டீ டிராபி செஸ்; 800 வீரர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 30, 2025 12:34 AM

திருப்பூர்; பாரத் செஸ் அகாடமி மற்றும் நிப்ட்-டீ கல்லுாரி சார்பில், மாநில அளவிலான நிப்ட்-டீ டிராபி செஸ் போட்டி, முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில் நேற்று நடைபெற்றது. ஒன்பது வயதுக்கு உட்பட்டோர், 12 வயது, 16 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவு என, நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 800 பேர் பங்கேற்றனர்.
ஒன்பது வயதுக்கு உட்பட்டோர்: ஆண்களுக்கான ஒன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், விருதுநகர் யுவகிருஷ்ணா முதலிடம்; ஈரோடு கிருத்திக் இரண்டாமிடம்; சேலம் ஆத்விக் மூன்றாமிடம். பெண்களுக்கான போட்டியில், சென்னை மதுமிதா முதலிடம்; ஈரோடு ஜக்யா இரண்டாமிடம்; நாமக்கல்திவிக் ஷா மூன்றாமிடம்.
12 வயதுக்கு உட்பட்டோர்: ஆண்களுக்கான 12 வயது பிரிவு போட்டியில், சேலம் பைசல் சல்மான் முதலிடம்; திருப்பூர் ரித்திக் இரண்டாமிடம்; கோவை தன்விக் மூன்றாமிடம். பெண்கள் பிரிவில், துாத்துக்குடி தான்யாஸ்ரீ முதலிடம்; சேலம் சுப்ரீதா இரண்டாமிடம்; சென்னை ஷனா மூன்றாமிடம்.
16 வயதுக்கு உட்பட்டோர்: பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சேலம் ஆர்த்தி முதலிடம்; புதுச்சேரி அட்லைன் இரண்டாமிடம்; சேலம் காவ்யா மூன்றாமிடம்.
ஆண்கள் பிரிவில், அபினேஷ் முதலிடம்; ஹரி பிரசாத் இரண்டாமிடம்; நிஷாந்த் மூன்றாமிடம்.
பொது பிரிவு: பொது பிரிவினருக்கான போட்டியில், கோவையை சேர்ந்த சர்வேஸ்வரன் முதலிடம்; திருப்பூரை சேர்ந்த ஸ்ரீஹரி இரண்டாமிடம்; தர்மராஜ் மூன்றாமிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற செஸ் வீரர்களுக்கு, நிப்ட்-டீ கல்லுாரி இணைச் செயலாளர் மோகன்குமார் பரிசு வழங்கினார். கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் பங்கேற்றனர்.
பொதுப்பிரிவில் முதலிடம் பிடித்த வீரருக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மற்றபிரிவுகளில் முதல் 50 இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பை, பதக்கம் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.