/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழக அரசு நிறுவனத்துடன் 'நிப்ட்- டீ' கல்லுாரி ஒப்பந்தம்
/
தமிழக அரசு நிறுவனத்துடன் 'நிப்ட்- டீ' கல்லுாரி ஒப்பந்தம்
தமிழக அரசு நிறுவனத்துடன் 'நிப்ட்- டீ' கல்லுாரி ஒப்பந்தம்
தமிழக அரசு நிறுவனத்துடன் 'நிப்ட்- டீ' கல்லுாரி ஒப்பந்தம்
ADDED : ஜூலை 01, 2025 11:54 PM

திருப்பூர்; திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில் நேற்று, எளிமையான சிந்தனைகளை துாண்டும் மாணவர் விழிப்புணர்வு' என்ற தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தமிழக அரசின், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்துறை இன்ஸ்டிடியூட் இயக்குனர் அம்பல கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திட்ட பணிகள் குறித்து, சிறப்பு விருந்தினர் விளக்கினார்.
கல்லுாரி தலைவர் மோகன் தலைமை வகித்தார். முதன்மை வழிகாட்டி ஆலோசகர் ராஜா சண்முகம், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். கல்லுாரி 'டீன்' சம்பத் வரவேற்றார்.
தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ், 'தலைமை திறன் மற்றும் தொழில்முனைவோராக மாறுவதற்கான தகுதிகள் குறித்து மாணவர்களிடையே பேசினார். அதற்கான விதிமுறைகளை விளக்கி, அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கினார். புதுமை திட்ட உதவி இயக்குனர் பிரேம்குமார், திட்டத்தில் பயனடைந்தவர்கள் குறித்து பேசினார்.
இந்நிலையில், தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க விழிப்புணர்வு அமைப்பு மற்றும் 'நிப்ட்-டீ' கல்லுாரி இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும், தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து கிடைக்க உள்ளது. முன்னதாக, புத்தாக்க தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும், நான்கு நிறுவனங்களுக்கு, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிதியுதவி வழங்கப்பட்டது.