/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிநவீன தொழில்நுட்பங்கள் சங்கமம் 'நிட்ேஷா' நாளை துவக்கம்
/
அதிநவீன தொழில்நுட்பங்கள் சங்கமம் 'நிட்ேஷா' நாளை துவக்கம்
அதிநவீன தொழில்நுட்பங்கள் சங்கமம் 'நிட்ேஷா' நாளை துவக்கம்
அதிநவீன தொழில்நுட்பங்கள் சங்கமம் 'நிட்ேஷா' நாளை துவக்கம்
ADDED : ஆக 06, 2025 10:58 PM

திருப்பூர்; 'நிட்-ஷோ' பின்னலாடை இயந்திர கண்காட்சி, திருப்பூரில் நாளை துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. உலகளாவிய, நவீன ஆடை உற்பத்தி தொழில்நுட்பங்களை, முழு இயக்க நிலையில் பார்வையிடலாம்.
சர்வதேச அளவில், பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்தும் அதிநவீன இயந்திரங்கள் தொடர்ந்து அறிமுகமாகிவருகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செலவுகளை குறைத்து உற்பத்தியை பெருக்குவதோடு, சீரான மற்றும் துல்லியமான ஆடை தயாரிப்புக்கும் கைகொடுக்கின்றன.
லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி பயணித்துவரும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கண்டறிந்து, தங்கள் நிறுவனங்களை 'அட்டேட்' செய்துவருகின்றனர்.
கைகொடுக்கிறது திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய பின்னலாடை உற்பத்தி துறையினரும், உலகளாவிய, புதுமையான தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டறிந்து, தங்கள் நிறுவனங்களை மேம்படுத்த, 'நிட் ஷோ' கண்காட்சி கைகொடுத்துவருகிறது.
நடப்பு ஆண்டுக்கான 'நிட் ஷோ' கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோட்டில், மணி மஹாலுக்கு எதிரே உள்ள டாப்லைட் மைதானத்தில், நாளை துவங்குகிறது. வரும் 10ம் தேதி வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
500 ஸ்டால்கள் கண்காட்சிக்காக, 5 மெகா அரங்குகளில், 500க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, சீனா என வெளிநாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் தயாரிப்பில், புதுமையான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட, சமீபத்தில் அறிமுகமான, நிட்டிங், கட்டிங், பிரின்டிங், காம்பாக்டிங், தையல் இயந்திரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் சங்கமிக்கின்றன. பிரின்டிங் இங்க், இயற்கை சாயங்கள், ஆடை தயாரிப்புக்கு தேவையான அக்சசரீஸ்களும் பிரத்யேக அரங்குகளில் வைக்கப்படுகின்றன.
நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது: முந்தைய ஆண்டுகளைவிட, இந்தாண்டு நிட் ஷோ கண்காட்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பிலான நவீன, நிட்டிங், தையல், ஆட்டோமேட்டிக் கட்டிங், டிஜிட்டல் பிரின்டிங், எம்ப்ராய்டரி, எலாஸ்டிக் 'கட் அண்ட் ஸ்டிச்' என அனைத்து இயந்திரங்களையும், முழு இயக்க நிலையில் காணலாம்.
உலகளாவிய ஆடை வர்த்தக சந்தையில், வர்த்தக போட்டிகள் அதிகரித்து காணப்படுகின்றன. இச்சூழலில், செலவினங்களை குறைத்து, உற்பத்தியை பெருக்கம்; தவறுகள் குறைக்கப்பட்டு, துல்லியமான உற்பத்தி மிகவும் அவசியமாகிறது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப்ஒர்க் துறையினர், பின்னலாடை துறையில் அடியெடுத்துவைக்க உள்ள புதிய தொழில்முனைவோர் அனைவரும், நிட்-ஷோ கண்காட்சியை தவறாமல் பார்வையிடவேண்டும். அனைத்து நவீன இயந்திரங்களை பார்வையிட்டு, தங்கள் நிறுவனங்களை மேம்படுத்தி, திருப்பூரின் ஒட்டுமொத்த பின்னலாடை துறையின் இலக்கை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.