/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவைக்கு பஸ் இல்லை; தவிக்கும் மக்கள்
/
கோவைக்கு பஸ் இல்லை; தவிக்கும் மக்கள்
ADDED : ஏப் 14, 2025 05:28 AM
பல்லடம் : பல்லடத்தில் இருந்து கோவை செல்ல, இரு வழித்தடங்கள் உள்ளன. காரணம்பேட்டை, சூலுார், ஒண்டிப்புதுார், சிங்காநல்லுார் வழியாக செல்வது பிரதான வழித்தடம்.
பல்லடம், செட்டிபாளையம் ரோட்டில், கரடிவாவி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, போத்தனுார் வழியாக செல்வது மற்றொரு வழித்தடம்.
பொதுமக்கள் கூறியதாவது: செட்டிபாளையம் ரோட்டில், எண்ணற்ற குக்கிராமங்கள் உள்ளன.
தினசரி, வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் என, ஏராளமானோர் பல்லடம் சென்று, அங்கிருந்து கோவைக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது. செட்டிபாளையம் ரோடு வழியாக கோவை, உக்கடம் செல்ல வழித்தடம் உள்ளது.
ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. செட்டிபாளையம் ரோடு வழியாக கோவை, உக்கடம் செல்ல பஸ்களை இயக்குமாறு,மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

