ADDED : பிப் 22, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ரயில்வே நிலையம், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், பொலிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
கட்டுமானப்பணிக்கு கம்பி 'வெல்டிங்' வைக்கும் பணி, ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள, பிரதான சாலையில் வைத்து மேற்கொள்ளப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இருந்து, மின் இணைப்பு எடுத்து, சாலையில் வைத்து 'வெல்டிங்' வேலை மேற்கொள்ளப்படுகிறது.ஒரு வேளை ஒயரில், மின் கசிவு ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் மின் விபத்து நேரிட்டாலோ, அது ஆபத்தாக முடியும் என, அங்குள்ளவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பணிக்கு மின் இணைப்பு பெறப்படும் போது, மின்வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.