/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வறை இல்லை... ஆய்வகமும் இல்லை:ஆனாலும் சாதித்த என்.ஆர்.கே.,புரம் அரசு பள்ளி
/
தேர்வறை இல்லை... ஆய்வகமும் இல்லை:ஆனாலும் சாதித்த என்.ஆர்.கே.,புரம் அரசு பள்ளி
தேர்வறை இல்லை... ஆய்வகமும் இல்லை:ஆனாலும் சாதித்த என்.ஆர்.கே.,புரம் அரசு பள்ளி
தேர்வறை இல்லை... ஆய்வகமும் இல்லை:ஆனாலும் சாதித்த என்.ஆர்.கே.,புரம் அரசு பள்ளி
ADDED : மே 11, 2025 01:00 AM

திருப்பூர்: புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம், தேர்வறை இல்லை; இருந்த போதும், தேர்வெழுதிய, 150 மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்று அசத்திக் காட்டியுள்ளனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, 2வது ரயில்வே கேட் அருகிலுள்ள புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியர் எண்ணிக்கை, 1,200. பிளஸ் 2 தேர்வை, 150 மாணவியர் எழுதி, 150 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஒன்பது பள்ளிகளில், நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை தந்த ஒரே பள்ளி என்பதால், இப்பள்ளி நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவ்வாறு சாதனை படைத்த பள்ளியில், விரிவான வசதியுடன் ஆய்வகம் இல்லை. பள்ளி பயன்பாட்டுக்கென உள்ள அறைகள் தற்காலிக ஆய்வகமாக மாற்றப்பட்டு, மாணவியருக்கு பாடம் கற்றுத்தர வேண்டிய நிலை உள்ளது. இருந்தபோதிலும், மாணவியரை தயார்படுத்தி செய்முறைத்தேர்விலும் முழு மதிப்பெண் பெற வைத்துள்ள ஆசிரியர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
தேர்வெழுத
நடைபயணம்
இப்பள்ளிக்கென பிளஸ் 2 தேர்வு மையம் இல்லை. இதனால், ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சென்று, தேர்வெழுதி விட்டு மதியம் தங்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வரும் மாணவியர், காலை உணவு சாப்பிட்டு விட்டு, வேறு பள்ளி தேர்வறைக்கு நடந்து செல்கின்றனர். இவர்களுடன் ஆசிரியர்களுடன் நடந்து சென்று திரும்பினர். தேர்வு முடிந்து பள்ளிக்கு வந்து மதிய உணவுக்கு பின், மறுநாள் தேர்வுக்கு தயாராகின்றனர்.
இவ்வளவு சோதனைகளையும் கடந்து, இப்பள்ளி பிளஸ் 2 மாணவி, தாராஸ்ரீ, 576 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். வணிகவியல், கணிணிபயன்பாடு இரண்டிலும் சதமடித்த மாணவிய் ஜனஜி, 575 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பிரீத்தி, 570 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். கணிணி அறிவியலில், ஏழு பேரும், கணிணி பயன்பாட்டில், 10, வணிகவியல் இரண்டு, கணிதத்தில் ஒரு மாணவி நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கியுள்ளார்.
சத்தமின்றி பல சாதனைகளை செய்தது எப்படி என்று, தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி கூறியதாவது:
எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மாணவியர் என அனைவரும், ஒரு குடும்பாக இணைந்து செயலாற்றுவோம். தேர்வெழுத தயாராகும் ஒவ்வொரு மாணவி மீது தனி கவனம் செலுத்தினோம். மாணவியருக்கு ஒழுக்கம், நேர்மை, பொறுப்பை முதலில் கற்றுத்தருகிறோம். குடும்பத்தினரை எண்ணி, படிப்பை கவனமாக தொடர வேண்டும் என இயன்றவரை அறிவுரை கூறி தேர்வெழுத வைக்கிறோம்.
தேர்வுக்கு தயாராக காலை, 8:00 முதல் மாலை 6:00 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டன. ஆர்வமுடன் மாணவியர் பங்கேற்றதாலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பாலும், இந்த சாதனை சாதமாக்க முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கு போதிய இடவசதி இல்லை. புதியதாக கட்டடம் கட்ட வழியில்லாத நிலை உள்ளது. ஆனால், ஆண்டுக்காண்டு அட்மிஷன் அதிகரிக்கிறது. ஒரே வளாகத்தில் துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையத்துடன் செயல்படுகிறது