/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எவ்வளவு மழை பெய்தாலும்.. நாங்க ரெடியா இருக்கோம்! தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம்
/
எவ்வளவு மழை பெய்தாலும்.. நாங்க ரெடியா இருக்கோம்! தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம்
எவ்வளவு மழை பெய்தாலும்.. நாங்க ரெடியா இருக்கோம்! தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம்
எவ்வளவு மழை பெய்தாலும்.. நாங்க ரெடியா இருக்கோம்! தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம்
ADDED : அக் 16, 2024 12:34 AM

திருப்பூர் : திருப்பூர் நகரப் பகுதியில் மழை நாட்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது, என மேயர் தெரிவித்தார்.
தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் மழை பாதிப்பு தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில், சமீபத்தில் ஆயுத பூஜை நாட்களின் போது சேகரமான குப்பைகள் அதிகளவில் உள்ளது. துாய்மைப் பணியாளர்கள் முடுக்கிவிடப்பட்டு அகற்றும் பணி மும்முரமாக நடக்கிறது. நாளைக்குள் (இன்று) குப்பை முற்றிலும் அகற்றப்பட்டு விடும்.
மழை நாட்களில் நகரப் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எந்த அளவு அதிக மழை பெய்தாலும் உடனடியாக அப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் உடனுக்குடன் அகற்றப்படும். இதற்காக நீர் உறிஞ்சி அகற்றும் 20 வாகனம் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகள், ரோடுகளில் மழை நீர் தேங்கினால் அகற்றும் வகையில் 30 எச்.பி., திறன் கொண்ட 10 மோட்டார் தயாராக உள்ளன.
மண்டல அளவில் தேவையான முன்னேற்பாடுகள் மழை பாதிப்பை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பிளீச்சிங் மற்றும் குளோரின் பவுடர்கள் தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்தால் வெட்டி அப்புறப்படுத்த வேண்டிய உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாக பெரும்பாலான கழிவு நீர் கால்வாய்களில் தேங்கி கிடந்த மண் உள்ளிட்ட குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு அவற்றில் தண்ணீர் தேங்காமல் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் உரிய மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. தற்காலிக தங்கும் முகாம்கள் தேவைப்படும் நிலையில், அவற்றுக்கும் பள்ளிகள், சமுதாய நலக் கூடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரப் பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் தேவையான இடங்களில் உடனுக்குடன் சென்று பணி மேற்கொள்ள ஏதுவாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, தயாராக உள்ளனர்