/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஸ்க்ரப் டைப்ஸ்' நோய் பாதிப்பு இல்லை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் 'பளிச்'
/
'ஸ்க்ரப் டைப்ஸ்' நோய் பாதிப்பு இல்லை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் 'பளிச்'
'ஸ்க்ரப் டைப்ஸ்' நோய் பாதிப்பு இல்லை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் 'பளிச்'
'ஸ்க்ரப் டைப்ஸ்' நோய் பாதிப்பு இல்லை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் 'பளிச்'
ADDED : ஜன 08, 2025 11:06 PM
உடுமலை; ''திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் ஸ்க்ரப்டைப்ஸ்' நோய் பாதிப்பு இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணி, பூச்சிகள், உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும் போது அவர்களுக்கு 'ஸ்க்ரப் டைப்ஸ்' நோய் ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்பு, தொடர் உடல் அரிப்பு ஏற்படும். மலைப்பகுதி அருகே வசிக்கும் மக்களுக்கு அதிகளவில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், செங்கல்பட்ட உள்ளிட்ட மாவட்டங்களில் 'ஸ்க்ரப் டைப்ஸ்' நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் மலையோர பகுதிகளாக உள்ள திருமூர்த்தி மலை, சின்னாறு - மூணாறு பாதை, ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையான சென்னிமலை, கொடுமணல், உள்ளிட்ட மலைகள் உள்ள இடங்கள், அருகே குடியிருப்புகளில் வசிப்பவர்களின் உடல் நலத்தை ஆராயும் பணியை மாவட்ட சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இதற்காக, அந்தந்த தாலுாகா, வட்டார அளவில் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. ஏதேனும் பகுதியில் நோய் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தேவையான மருத்துவ முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட மருத்துவத்துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலையோர பகுதியில் வசிப்பவர்கள் உடல்நலம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இதுவரை யாருக்கும், 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் பாதிப்பு ஏற்படவில்லை. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்,'' என்றார்.

