/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருக்கை இல்லை; கலெக்டர் ஆபீசில் அவலம்
/
இருக்கை இல்லை; கலெக்டர் ஆபீசில் அவலம்
ADDED : ஆக 26, 2025 06:27 AM

திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமை நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
பொதுமக்கள் கொண்டுவரும் மனுக்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ரசீது வழங்கப்படுகிறது. அதன் பின்னரே, கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் மனு அளிக்க, கூட்ட அரங்கினுள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மனுக்களை அலுவலர்களிடம் கொடுத்துவிட்டு, பதிவு செய்யும்வரை, பொதுமக்கள், குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு வெளியே, போர்டிகோ பகுதியில் காத்திருக்கின்றனர்.
அப்பகுதியில் எவ்வித இருக்கை வசதியும் இல்லாததால், மக்கள் கால்கடுக்க நின்று கொண்டிருக்க வேண்டியுள்ளது.
சில நேரங்களில், அரைமணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், கால் வலியால் பலரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குறைகேட்பு கூட்ட நாளில், மனு அளிக்க வரும் மக்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக, போர்டிகோ பகுதியில் பெஞ்ச் வசதி செய்துதர வேண்டும்.