நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், பிரதான பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை தளி ரோட்டில், நுாலகம், குட்டைத்திடல், நகராட்சி அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோடு வழியாக, திருமூர்த்தி அணை, அமராவதி அணை, சின்னார், மூணார் பகுதிகள், கிராமங்களுக்கு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.
இந்த ரோட்டில், பிரதான பஸ் நிறுத்தமாக யூனியன் ஆபீஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு நிழற்கூரை இல்லாததால், பெண்கள், முதியோர், குழந்தைகள் திறந்த வெளியில், வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
எனவே, இங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.