ADDED : பிப் 18, 2024 01:53 AM
திருப்பூர்; பல்லடம் கிராமக் கோவில் பூஜாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. நடராஜன், தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
இதில், கோவில்களில் பூஜை செய்து வரும் பூஜாரிகளுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்களை பறிமுதல் செய்யும் அறநிலையத் துறையின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.மன்னராட்சி காலம் முதல், கிராமக் கோவில்களில், பூஜை செய்து வருவோருக்கு கடந்த 1863ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இனாம் நிலம் வழங்கியது. அதில் விவசாயம் செய்து அந்த வருமானத்தைக் கொண்டு பிழைத்து வருகிறோம். இந்த நிலங்களை குறி வைத்து அறநிலையத் துறை அவற்றைப் பறிமுதல் செய்து வருகிறது.
ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.இதற்கு துணையாக உள்ள தி.மு.க., அரசுக்கு வரும் தேர்தலில் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.