/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; குற்றவாளிகள் கண்டறிவதில் சிக்கல்
/
கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; குற்றவாளிகள் கண்டறிவதில் சிக்கல்
கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; குற்றவாளிகள் கண்டறிவதில் சிக்கல்
கண்காணிப்பு கேமராக்கள் இல்லை; குற்றவாளிகள் கண்டறிவதில் சிக்கல்
ADDED : நவ 18, 2024 06:36 AM

பல்லடம் ; பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் கடந்த ஒரு ஆண்டில், 6 கொலை வழக்குகளில், 24 குற்றவாளிகளும், 10 கொலை முயற்சி வழக்குகளில், 29 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், 20 கஞ்சா வழக்குகளில், 29 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 23 கிலோ கஞ்சா, 110 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 805 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 127 வழக்குகளுடன், 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அக்னி ராஜ் கொலை வழக்கை தொடர்ந்து, பல்லடத்தில் நடந்த வினோத் கண்ணன் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், சில தினங்களிலேயே முக்கிய குற்றவாளியான தங்கராஜ் உட்பட, 11 பேரை கைது செய்தனர்.இதேபோல், சமீபத்தில், காரணம்பேட்டையில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில், 4 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகள், 4 பேரையும் மூன்றே நாட்களில் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சுறுசுறுப் பாக செயல்பட்ட போதும், சில இடையூறுகள் விசாரணைக்கு தொய்வை ஏற் படுத்துகின்றன. திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களின் போது, கண்காணிப்பு கேமராக்களே பெரிதும் கைகொடுக்கின்றன. ஆனால், இதற்காக, போலீசார், தனியார் உதவியை நாட வேண்டியுள்ளது.
நகரப் பகுதி முழுவதும், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் விசாரணை எளிதாகும்; குற்றவாளிகளையும் உடனுக்குடன் கைது செய்ய முடியும். இதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை, போலீசார் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.